வழக்கம் போலதான்.. சைலண்ட்டாக ஷூட்டிங் கிளம்பினார் மணிரத்னம்!

பெயரில் இருக்கிற சவுண்ட் மணிரத்னத்தின் வேலைகளில் தெரிவதில்லை.
எப்போது படத்தை ஆரம்பிக்கிறார். எப்போது முடிக்கிறார் என்கிற சீக்ரெட்டெல்லாம் படப்பிடிப்பு முடியும் வரை வெளியில் தெரியாது.
ஓ.கே கண்மணி படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு படத்தை உறுதி செய்தவர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வந்தார்.
பெரும்பாலும் தனது படங்களின் காட்சிகளுக்கு தேவைப்பட்டால் ஒழிய வெளிநாடுகளுக்குச் செல்லாத மணிரத்னம் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
கார்த்தியுடன் நாயகி அதிதி ராவ் ஹைத்ரியும் செல்கிறார். வழக்கம் போல யாருக்கும் தெரியாமல் சைலண்ட்டாக தனது யூனிட்டைகூட்டிக் கொண்டு சென்றவர் படப்பிடிப்பை இம்மாதத்துடன் முடித்து வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.