ஜல்லிக்கட்டு வெற்றியை 1200 கிலோ கேக் வெட்டிக் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

Raghava Lawrence

டிகர் லாரன்ஸ் உடன் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினார்கள் இளைஞர்கள்.

இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவானது. அதை முறியடிக்கும் விதமாக 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி சாதனை படைத்துள்ளனர்.

Related Posts
1 of 18

மேலும் விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ் ”’ஜல்லிக்கட்டு’ போராட்டத்தில் உயிர் இழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறினார்.

இந்த வெற்றி விழாவை எங்களுடன் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் யோகேந்த்ரன், மணிகண்டன் என்கிற இருவர் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.

அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கேக்கை வெட்டுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவர்கள் ஆன்மாவுக்கும் சாந்தி கிடைக்கும்” என்று பேசினார். அதன்படி அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கேக் வெட்டினர்.