‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட விழாவில் சிம்பு உருக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

மீபத்தில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் வி.பி. விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்.

விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மே 21-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

விஷால், கார்த்தி, சிம்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்த விழாவில் சிம்பு பேசியதாவது, ‘நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா, உள்ளிட்ட விழாவுக்கெல்லாம் போக மாட்டேன். விவேக் சார் இந்த படத்தைப் பத்தி சொன்னாரு. சின்ன பசங்கள ஹீரோவாக்கி அவங்க பின்னாடி நின்னு இந்த படத்தை கொடுத்திருக்கார். விவேக் ஒரு படத்துல நடிக்கும் போது ஒருத்தர ஒரு சீன் நடிக்க கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். அப்படி அவர் சொல்லலனா சந்தானம்னு ஒருத்தர் வந்திருக்க முடியாது.

Related Posts
1 of 122

இந்த படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லனா நீங்க வந்திருக்க மாட்டீங்க. நான் என் குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க கத்துக்க தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். ஆனா.. அங்க யாரு மொதல்ல ஆன்சர் பண்றாங்கனு தான் பாக்குறாங்க. பேரண்ட்ஸ்கிட்ட ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ.. அந்த திறமைய வளர்த்து விடுங்க. பொறாமை, போட்டிலாம் வேணாம். நடிகர் சங்க தேர்தலின் போது, விஷாலை எதிர்த்து பேசினேன். ஆனா நடிகர் சங்க கட்டிடம் கட்டும் போது நல்ல மனசோட விஷால் என்னை அழைத்தார். அவருடைய மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான். என்னுடைய ரசிகர் ஒருத்தன் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டான். அத விட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த தகராறு விசயத்துல ஒன்பது பேர் கைதாகி இருக்காங்க. ஒருநாள் யதார்த்தமா அவர் நண்பர்களை பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விசயம் கேட்டப்ப தான் விஷயத்த சொன்னாங்க.

அந்த ரசிகர் எத்தன முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு. அதனாலத்தான் அவனுக்காக போஸ்டர் ஒட்டுனேன். அத நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதா சொல்றாங்க. ஆனா அதுக்காகலாம் நான் பண்ணல. எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. உங்க மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரியும். இனிமே எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்.

நான் எப்பவும் என் இஷ்டப்படி தான் இருப்பேன். அது பல பேருக்கு பிரச்சினையா இருக்கு. இனி அந்த பிரச்சினை வராம பாத்துக்கிறேன். நான் படப்பிடிப்புக்கு லேட்டா போறதனால எல்லாருக்கும் கஷ்டம்னா நான் இனிமே படப்பிடிப்புக்கு லேட்டா போக மாட்டேன்’ என்றார் சிம்பு.