தீபாவளி விருந்தாக வெளியாகிறது ‘ரெய்டு’!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ஆக்ஷன் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ’ரெய்டு’ நவம்பர் 10, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார் மற்றும் இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றிற்காக தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி.மணிகண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உறுதியாக உணர்ந்ததாக நடிகர் விக்ரம் பிரபு இந்தப் படம் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், தான் கமர்ஷியல் வளையத்திற்குள் படம் நடிப்பது குறித்து எப்போதும் அதிகம் யோசிப்பேன் என்றும் ஆனால், இப்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வெளியீட்டைப் பார்த்த பிறகு இயக்குநர் கார்த்தி தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.