விஜய் ஆண்டனி ஹீரோன்னதும் ஓ.கே சொல்லிட்டேன்! : ‘எமன்’ படம் பற்றி மியா ஜார்ஜ்
‘சைத்தான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாளை பிப்ரவரி 24-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தை விஜய் ஆண்டனியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
‘எமன்’ படத்தோட டைரக்டர் ஜீவா சார் தான் அவரோட ‘அமர காவியம்’ படத்துல என்னை நாயகியாக தமிழில் அறிமுகப்படுத்தினார். அப்பவே அவரோட திறமையை படப்பிடிப்பில் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து ரொம்ப ரசிச்சு எடுப்பார்.
அந்தப் படத்துக்கப்புறம் திடீர்ணு ஒரு நாள் போன் பண்ணி விஜய் ஆண்டனியை வெச்சு ‘எமன்’ன்னு ஒரு படம் பண்ணப்போறேன்து. அதுல நீ தான் ஹீரோயின் சொன்னார். விஜய் ஆண்டனி படம்னு சொன்ன அடுத்த நிமிஷம் எந்தக் கேள்வியும் கேட்காக நடிக்க ஓ.கே சொல்லிட்டேன். அப்புறமா சாவகாசமாத்தான் படத்தோட கதையை போன்ல கேட்டேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஜீவா சங்கர் சார் கதை சொன்னார். சொல்றதுக்கு முன்னாடி இந்தக் கதையில நெறைய விஷயங்கள் இருக்கும். அதனால கவனமாகக் கேளுன்னு சொன்னார்.
அவர் அப்படின்னு சொன்னதும் பேப்பர், பேனாவை எடுத்து அவர் கதையைச் சொல்ல சொல்ல எழுத ஆரம்பிச்சுட்டேன். அப்படியே எமன் படத்தோட கதை மட்டும் இப்பவும் 18 பக்கங்கள்ல என்கிட்ட இருக்கு. என்று சொல்லும் மியா ஜார்ஜ் இந்தப் படத்தில் ஒரு நடிகையாகவே வருகிறாராம்.
இதற்கு முன்பு ‘அமர காவியம்’, ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’ என குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் இந்த ‘எமன்’ படம் என்னுடைய சினிமா கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் மியா ஜார்ஜ்.