இந்தாங்க இன்னொரு சான்ஸ் : ஸ்ரீதேவிக்காக இரக்கப்பட்ட ராஜமெளலி
உலகளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படங்களாக அமைந்து விட்டன ராஜமெளலி இயக்கத்தில் ரிலீசான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ திரைப்படங்கள்.
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த ‘சிவகாமி’ கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்தளவுக்கு பிரபலமான இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தினார் டைரக்டர் ராஜமெளலி.
ஆனால் அந்தக் கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவி கோடிகளில் சம்பளம் கேட்டதோடு, எக்ஸ்ட்ராவாக சில செலவுகளுக்கும் சேர்த்து பெரிய பில்லாகச் சொன்னார். இதனால் அவரைத் தவிர்த்து விட்டு அந்தக் கேரக்டரில் அவரை விட குறைவான சம்பளத்துக்கு ஓ.கே சொன்ன ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தார்.
இரண்டு பாகங்களும் ரிலீசாகி உலக அளவில் நல்ல வசூலையும், பெயரையும் பெற்றது ஸ்ரீதேவிக்கு வருத்தத்தை கொடுத்தது. இதுபற்றி ‘மாம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேள்வியாக எழுப்பிய போது கூட ”அது முடிந்து போன ஒன்று. இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது” என்று வந்த வாய்ப்பை தவற விட்ட தொணியில் பேசினார். அதோடு இதுகுறித்து ராஜமெளலிக்கும், ஸ்ரீதேவிக்கும் வார்த்தை போர் கூட நடந்தது.
எல்லாம் முடிந்து தற்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கும் ராஜமெளலியில் புதுப்படத்தில் மீண்டும் ஸ்ரீதேவிக்கு இன்னொரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.
ஆமாம் மோகன்லால் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் அதற்கான பேச்சு வார்த்தை தொடங்க இருக்கிறது.
இந்த முறையாவது சம்பளத்தை கொஞ்சம் குறைச்சுங்க ‘மயிலு’!