இந்தியாவில் முதல் முயற்சி – ‘யூ-ட்யூப்’ இணையதளத்திற்காக நான்கு மொழிகளில் தயாராகும் திரைப்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்சியாக யூ- ட்யூப் இணையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம்.

Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.

இந்த முயற்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில் “யூ- ட்யூப் இணையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் யூ- ட்யூப் இணையதளத்தின் பங்கு அபாரமானது.

Related Posts
1 of 142

இதுவரை எத்தனையோ படங்களும் யூ- ட்யூப் இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை யூ- ட்யூப் வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது யூ- ட்யூப் வெளியீட்டிற்க்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. அவர்களும் இது ஒரு நல்ல முயற்ச்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாக நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம்.

இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக யூ-ட்யூப் இனையதளத்தில் வெளியானாலும் இதர OTT எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்ச்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிட இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.