‘காளி’யை திரையில காட்டுறேன்… : ரஜினிக்கு உறுதியளித்த ‘மெட்ராஸ்’ ரஞ்சித்
ரஜினியின் அடுத்த படத்தை ‘மெட்ராஸ்’ பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத் தயாராகி வருவது தெரிந்ததே.
ரஜினியை வைத்து ஒரு படத்தையாவது தயாரித்து விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவோடு இருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அவருடைய அந்த பல வருடக்கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
புதுமுகம் நடித்த படமென்றாலே பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து மிரட்டும் தாணு சூப்பர் ஸ்டார் படமென்றால் மிரட்டலுக்கு கேட்கவா வேண்டும். படத்தின் ஒவ்வொரு சீனுமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று இயக்குநர் ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இதற்கிடையே ரஞ்சித்தைக் கூப்பிட்டுப் பேசிய ரஜினி “மெட்ராஸ் படத்தைப் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் உங்ககூட படம் பண்ணனும் ஆசைப்பட்டேன். அந்த மாதிரி ரியலா, எளிமையா ஒரு படம் பண்ணனும். எல்லா கேரக்டர்களுமே நிஜ மனிதர்களை பார்க்கிற மாதிரி இருக்கணும் என்று கேட்டுக்கொண்டாராம்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் ரஞ்சித்தோ ”கண்டிப்பா சார், முள்ளும் மலரும் படத்துல வர்ற காளி கேரக்டர் எப்படி இருக்குமோ? அப்படி ஒரு யதார்த்ததை படத்துல காட்டுறேன்” என்று கேரண்டி கொடுத்தாராம்.