இந்தாளுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு! : வாங்கி கட்டிக் கொள்ளும் ராம்கோபால் வர்மா
சர்ச்சைகளையும், ராம் கோபால் வர்மாவையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது.
அடிக்கடி தனது ட்விட்டரில் ஏதாவது பிரபலங்களைப் பற்றி ஏதாவது கருத்துகளைச் சொல்லி அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
சூப்பர் ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து ஸ்ரீதேவி வரை கருத்துகளைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வரும் ராம்கோபால் வர்மா இப்போது அகப்பட்டிருப்பது சென்சார் தொடர்பான சர்ச்சையில்|
இவர் எடுக்கிற படங்கள் எல்லாமே படு ஆபாசமாகவும்,கவர்ச்சியாகவும் இருப்பதால் அவ்வப்போது சென்சார் அதிகாரிகளுடன் மோதிக்கொள்வார்.
அவர் எடுத்திருக்கும் ‘கில்லிங் வீரப்பன்’ படமும் அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிக்க, சும்மா இருப்பாரா? திடீரென்று குறும்படங்களை எடுக்க முடிவெடுத்தவர் அதில் முதல் படமாக ‘சிங்கிள் எக்ஸ்’ என்ற படத்தை வெளியிடப்போகிறார்.
மேற்படி படத்தின் போஸ்டரில் ஒரு பெண் அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சியாக நிற்பது போன்ற ஒரு ஸ்டில் வெளியிட்டு அதனை சென்சாருக்கு அர்ப்பணிக்கப் போவதாக கருத்து சொல்லியிருக்கிறார்.
அந்த ஆபாச போட்டோவைப் பார்த்தவர்கள் ராம்கோபால் வர்மாவின் துணிச்சலை பாராட்டுவது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் இவருக்கு மூளை மழுங்கி விட்டது, பைத்தியம் பிடித்து விட்டது, அதனால் தான் இப்படியெல்லாம் பெண்களை ஆபாசமாக காட்டுகிறார் என்று கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இதுக்கெல்லாம் கலங்குற ஆளா அவரு…?
