மேக்கப்போட வந்தாலே சுமாராத்தான் இருப்பேன்! ஹீரோ முன்னால் ஓப்பனாகப் பேசிய மகிமா

Get real time updates directly on you device, subscribe now.

mahima1

கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தை விட ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்த்தவர் அதில் வில்லன் விக்டராக வந்த அருண்விஜய் தான்.

அந்தப் படம் தந்த பாப்புலாரிட்டிக்கு இந்நேரம் அரை டஜன் படங்களாவது அவர் நடிப்பில் வெளிவந்திருக்க வேண்டும்.

ஆனால் ஒரு நல்ல படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும். அதனால் தான் இந்த தாமதம் என்றவர். இதோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’ திரைப்படம் மார்ச் 3ம் தேதி ரிலீசாகிறது. ‘ஈரம்’ பட இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மிடுக்கான போலீஸ் ஆபிசராக வருகிறார் அருண்விஜய்.

நிஜ போலீஸ் எப்படி நல்ல உடற்கட்டுடன் இருப்பார்களோ? அப்படி ஒரு மெனக்கிடல் அருண்விஜய்யிடம் இருப்பதை படத்தின் ட்ரெய்லரை பார்த்த போது தெரிந்து கொள்ள முடிந்தது.

Related Posts
1 of 4

சில தினங்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அருண் விஜய்யின் இந்த டெடிகேஷனைப் பற்றித்தான் மேடை ஏறியவர்கள் எல்லோரும் சிலாகித்தார்கள்.

அதிலும் நாயகி மகிமா கொஞ்சம் ஓப்பனாகவே பேசினார்…

”இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள் எல்லாவற்றிலும் என்னை ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி தான் காட்டியிருந்தாங்க. ஆனா இந்தப் படத்துல தான் முதல்முறையா ஒரு சோலோ ஹீரோயினா வர்றேன். படத்துல எனக்கு மேக்கப்பே வேணாம்னு டைரக்டர் சொல்லிட்டார். நாமெல்லாம் மேக்கப் போட்டாலே சுமாராத்தான் இருப்போம். இதுல மேக்கப் இல்லாம எப்படி இருப்போமோ?ன்னு பயந்தேன். ஆனா கேமராமேன் என்னை வித்-அவுட் மேக்கப்புலேயே அவ்ளோ அழகா காட்டியிருக்கிறார் அவருக்கு நன்றி.

‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்ததிலிருந்தே நான் விக்டரோட (அருண் விஜய்யைத்தான் சொல்றார்…) தீவிரமான ரசிகை. இந்தப் படத்துல அவருக்கே ஜோடின்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அருண் விஜய் நிஜமாலுமே ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கார். இன்னும் அவரோட சேர்ந்து நெறைய படங்கள்ல நடிக்கணும் என்றார் முகம் முழுக்க புன்னகையோடு!