ரசவாதி- விமர்சனம்
டைட்டிலில் இருக்கும் ஈர்ப்பு படத்தில் இருக்கிறதா?
சைக்கோத் தனமான வில்லன் அவனுக்கு ஒரு பின்கதை. கொடைக்கானலில் சித்த மருத்துவம் பார்க்கும் ஹீரோ அவருக்கு ஒரு பின்கதை. அதே கொடைக்கானலுக்கு ஹோட்டல் மேனேஜர் வேலைக்கு வரும் தான்யா அவருக்கு ஒரு பின்கதை. இவர்களோட மேலும் இரு பெண் கேரக்டர்கள் படத்தில் உள்ளன. அவர்களுக்கும் பின் கதைகள் உள்ளன. எல்லாக் கதைகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை
நடிகராக தன்னை முழுமையாக இயக்குநர் வசம் ஒப்புகொடுத்துள்ளார் அர்ஜுன் தாஸ். காலை லேசாக தாங்கி நடக்கும் நடையும், வர்மகலையில் காட்டும் சாகசமும் சிறப்பு. தான்யா தன் கேரக்டரின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். அவருக்கான பின்கதை அவர் ஹீரோவிடம் சொல்லும் காட்சி எமோஷ்னல் டச். சுஜித் சங்கர் சிறந்த சைக்கோ வில்லனாக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படலாம்..அப்படியொரு மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். ரேஷ்மா தான் இவர்கள் எல்லாரையும் விட நடிப்பு ரேஸில் முந்துகிறார். மிகச்சிறந்த நடிப்பு அவரின் நடிப்பு
தமனின் பின்னணி இசை சாந்தகுமாரின் திரைமொழியோடு அழகாக பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு ஒவ்வொரு ப்ரேமிலும் அசத்தியுள்ளார்.
மேக்கிங்கில் வழக்கம் போல மிரட்டியுள்ள சாந்தகுமார் பின்பாதி திரைக்கதையிலும், க்ளைமாக்ஸிலும் கோட்டை விட்டுள்ளார். மேலும் பல கிரிஞ்ச் காட்சிகளும் சலிப்பைத் தருகிறது. மலைகள் உடைப்படுவதனால் தகர்ந்து போகும் தொன்மங்கள், சித்த மருத்துவம் பற்றிய விளக்கம் என பல நல்ல விசயங்கள் படத்தில் இருந்தும் ரசனைக்கு வில்லனாக அமைந்துவிட்டான் இந்த ரசவாதி
2.5/5