விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” !

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் பரபரப்பான இரண்டாவது லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

Related Posts
1 of 4

‘ரத்தம்’ படத்தை CS அமுதன் இயக்கியுள்ளார் மற்றும் Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, G.தனஞ்செயன், B.பிரதீப், ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.இப்படத்தின் போஸ்ட் பு‌ரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.