பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும் பிரபுதேவா உற்சாகம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘ஹர ஹர மகாதேவகி’ ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Related Posts
1 of 5

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.