தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் !

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்தவகையில் அழகும் திறமையும் வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஜார்ஜ் ரெட்டி, வங்கவீட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தீப் மாதவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

Related Posts
1 of 2

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் விவி விநாயக் கலந்துகொண்டு படத்தின் ஸ்கிரிப்டை அதன் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல படத்தின் முதல் ஷாட்டையும் அவர் இயக்கினார்.இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து முழுவீச்சில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.ராவண கல்யாணம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய படமாக ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

#RavanaKalyanam #ராவணகல்யாணம்