கள்வன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பிறர் பொருளை அபகரிக்கும் கள்வன் ரசிகர்களை கவர்ந்தானா?

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் ஒரு கிராமம். அக்கிராமத்தில் வாழும் ஜிவி பிரகாஷும் விஜய் டிவி தீனாவும் நண்பர்கள். அவர்களின் முழு நேரத்தொழிலே திருடுவது தான். அப்படி அவர்கள் திருடும் போது ஹீரோயினைச் சந்திக்கும் சூழல் வருகிறது. கல்லூரியில் படிக்கும் ஹீரோயின் இவானா இந்தத் திருடர்களில் ஹீரோவான ஜிவியிடம் ஒரு உதவி கேட்கும் சூழல் வருகிறது. அச்சூழலைப் பயன்படுத்தி இவானாவை காதலிக்க முயற்சிக்கிறார் ஹீரோ. முடிவு என்னானது என்பதும், இவர்களுக்கு இடையில் பாரதிராஜா எப்படி வருகிறார்? என்பதும் தான் படத்தின் மிச்சசொச்ச கதை

ஜிவி இயல்பாக நடித்துள்ளார் என்றாலும் இன்னும் எமோஷ்னல் காட்சிகளில் அழுத்தம் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கலாம். படத்தின் மற்றொரு ஹீரோவாகவே வலம் வருகிறார் பாரதிராஜா. அவருக்கான பின்கதையை அவர் சொல்லும் போது அவரது குரலும் நன்றாக நடித்துள்ளது. மனிதர் பின்னியிருக்கிறார். இவானா தனது கேரக்டரின் வீரியம் குறையாமல் நடித்துள்ளார். இருப்பினும் இப்படி வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் பையன்கள் மேல் பொறுப்புணர்ச்சியுள்ள பெண்களுக்கு காதல் வருவதை தமிழ்சினிமா என்று தான் நிறுத்துமோ?
தீனா அவ்வப்போது சில காமெடிகள் செய்து ரசிக்க வைக்கிறார்

ஜிவி பிரகாஷின் பாடலிசை துள்ளல். ரெவாவின் பின்னணி இசை சிறப்பு. PV. சங்கர் படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு ஒளிப்பதிவும் செய்துள்ளார். சான் லோகேஷ் ஷார்ப்பாக எடிட் செய்துள்ளார்

கதையாக பழசு என்றால் திரைக்கதையில் துளியும் லாஜிக் இல்லை..உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டிய காட்சிகள் எல்லாம் மொக்கையான லாஜிக் மீறல்களால் பலவீனப்ட்டுள்ளன. கதை நடக்கும் நில பரப்பும் கதை மாந்தர்களின் கேரக்டர் வார்ப்புகளும் சற்று இன்ட்ரெஸ்டிங் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கள்வன் நம் நேரத்தை களவாண்டது தான் மிச்சம்
2.5/5