ஆகஸ்ட்16-1947- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சுதந்திரம் கிடைத்த செய்தி எட்டப்படாத ஒரு கிராமத்தின் ஒருநாள் கதை

விருதுநகர் அருகேயுள்ள செங்காடு என்ற கிராமத்தில் உள்ள அப்பாவி மக்கள் ராபர்ட் என்ற வெள்ளைக்கார அரக்கனின் கொடுமைகளுக்கு பயந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக வெள்ளைக்காரர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தரும் வேலையைச் செய்கிறார் மதுசூதனராவ். ஊரில் எந்தப் பெண் வயதுக்கு வந்தாலும் அவர்களை தூக்கிச் செல்லும் கேரக்டர் வெள்ளைக்காரன் ராபர்ட்டின் மகனுக்கு. இப்படியான சூழலில் தன் மகளை யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறார் மதுசூதனராவ். அந்தப் பெண்ணின் இருப்பை முன்னமே அறிந்துகொண்ட கெளதம் கார்த்திக் அந்தப்பெண் மேல் காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் ராபர்ட்டின் மகனுக்கு அந்தப்பெண்ணின் இருப்பு தெரிய… அவரைத் தன் இரையாக்கத் துடிக்கிறார். இந்த நேரத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. கிடைத்தச் சுதந்திரத்தை மறைத்து ஆடும் வெள்ளையனின் ஆட்டத்தை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை

கெளதம் கார்த்திக் மிகச்சில இடங்களில் மட்டுமே நடிகராக கவர்கிறார். மற்ற இடங்களில் நடிக்கிறார் என்பதை கண்டுபுடிக்க முடிகிறது. இன்னும் பயிற்சி வேணும் பாஸ். நாயகி ஓரளவு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார். ராபர்ட் கேரக்டரில் வில்லனாக வரும் ஆங்கிலேய நடிகர் ரிச்சர்ட் படத்தில் மிரட்டியிருக்கிறார். மிகச்சிறந்த தேர்வு அவர். நடிகர் புகழ் காமெடியை விட செண்டிமெண்ட் காட்சிகளில் கவர்கிறார். ஏனைய சிறு சிறு கேரக்டர்களும் அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஓரளவு பரவாயில்லை. ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருப்பது படத்தின் பாசிட்டிவ் அம்சம். 1947 காலகட்டத்தை கண்முன் நிறுத்தியதில் கலை இயக்குநர் ஜெயித்துள்ளார். காஸ்ட்யூம்ஸ்&மேக்கப் இரு துறைகளும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளன

நல்ல எமோஷ்னல் கதைக்களம் கிடைத்தும் திரைக்கதையில் போதிய வலுவில்லாமல் போனதால் படம் நமக்குள் ஒன்ற மறுக்கிறது. வலிந்து திணிக்கப்பட்ட தேச உணர்வும், நாடகத்தனமான காதல் காட்சிகளும் இன்னொரு மைனஸ். ப்ரீயட் படத்திற்காக இந்த டீம் கொடுத்துள்ள உழைப்பிற்காக மட்டுமே பாரட்டலாம்
2.75/5

#1947AUGUST16 #GauthamKarthik