சதவிகிதம் அடிப்படையில் சம்பளம்! இது சாத்தியமா?

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர்களின் சம்பளம் தான் தமிழ்சினிமா பட்ஜெட்டில் பெரும்பங்கு வகித்து வருகிறது. அதை மாற்றி அமைக்கு ஒருவழியை உருவாக்க முயற்சி ஒன்று நடக்கிறது. இந்தக் கொரோனா சினிமாவிலும் பல மாற்றங்கள் அமைய வழி வகுத்துள்ளது எனலாம். அது சம்பந்தமாக திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரியோடு ஒரு படம் தயாரிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் இந்தப்படத்தில் பங்கேற்கும் இயக்குநர் நடிகர்கள் அனைவருக்கும் சதவிகித அடிப்படையில் தான் சம்பளம் என்று கூறி இருக்கிறார்.

அதாவது படம் எவ்வளவுக்கு வியாபாரம் ஆகிறதோ அந்த அளவிற்கு இத்தனை சதவிகிதம் எனப் பிரித்து சம்பளம் வழங்கப்படுமாம். இதை ஏற்றுக்கொண்டு நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இப்படத்தை இயக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும்” என்று கூறிய திருப்பூர் சுப்பிரமணியண் மேலும் பல தகவல்களை சொல்லியுள்ளார்