ஏற்கனவே டாப்ஸி ‘இஞ்சி இடுப்பழகி’ : இப்போ இது வேறையா..?

Get real time updates directly on you device, subscribe now.

tapsee

தான் நடிக்கும் படங்களில் ஒரு சின்ன ரோல் என்றாலும் அதற்கு உடம்பை குறைப்பதும், ஏற்றுவதும் விக்ரமுக்கு அல்வா துண்டு சாப்பிடுகிற மாதிரி.

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அவர் செய்த உடல் உழைப்பு யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாதது.

ஹீரோக்கள் இந்த மாதிரியான ரிஸ்க்குகளை எடுப்பது அதிகரித்து வந்தாலும் நடிகைகள் மத்தியில் அப்படி ஒரு ரிஸ்க்கையெல்லாம் யாரும் எடுக்க முன் வருவதில்லை.

Related Posts
1 of 7

ஆனால் நடிகை டாப்ஸி விக்ரம் ரேஞ்சில் ஒரு படத்துக்காக தனது உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் தேடி வரும் ஹிந்திப்படங்களில் நடித்து வரும் டாப்ஸி ‘காஸி’ என்ற படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் ஒரு அனாதைப் பெண்ணாக நடிக்கும் அவர்

கவலையோடு இருக்கும், மன உளைச்சல் கொண்ட பெண் தோற்றத்திற்கு மாற வேண்டும் என்று படத்தின் டைரக்டர் கட்டளையிட்டிருக்கிறாராம். இதற்காக தனது உடம்பை மேலும் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் டாப்ஸி.

குச்சி ஐஸ் குண்டூசி ஆன ஆசைப்பட்ட கதை தான்!