தைரியமா சொல்லுங்க ராதிகா ‘சின்னத்திரை சி.எம்’ தான்! : பரபரப்பை கிளப்பிய எஸ்.ஏ.சி; பதறிய பா.விஜய்
இந்த வயசில் இவர் ஹீரோவாக அதிலும் ஆக்ஷன் படத்தில் நடித்துத் தான் ஆக வேண்டுமா? என்று பார்க்கிற எல்லோருமே கவலைப்படுகிறார்கள்.
ஆனால் எனக்கு இப்போதும் 19 வயது தான் ஆகிறது. என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை அதனால் தான் நடிக்கவும் ஆரம்பித்து விட்டேன் என்கிறார் இயக்குநரும், இளைய தளபதி விஜய்யின் அப்பாவும் ஆகிய எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஒரு நாயகனாக இவரும், இன்னொரு நாயகனாக பாடலாசிரியர் பா.விஜய்யும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘நையப்புடை’. அடுத்த வாரம் 26ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷன் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ஜீவாவின் 19வயதே ஆன மனக் விஜய் விக்ரம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.
நிகழ்ச்சிக்காக யாரை அழைக்கலாம் என்று யோசித்த போது வி.வி.ஐ.பி ராதிகாவை அழைக்கலாம் என்று முடிவு செய்து அவரை அழைத்தேன் என்றார். எஸ்.ஏ.சி.
சைலண்ட்டாக ஆரம்பித்த விழா பா.விஜய் போட்ட ஒரு பிட்டால் கலகலப்பும், கலவரமுமாக நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய பா.விஜய் ”இன்றைக்கு சின்னத்திரையில் ராதிகா மேடம் அவர்கள் கொடி கட்டிப் பறக்கிறார். அவரை ‘சின்னத்திரை சி.எம்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி விட்டுப் போனார். அடுத்து எஸ்.ஏ.சி பேச வரவும், அதற்கு முன்பாக மீண்டும் மைக்கப் பிடித்தவர் ‘சி.எம்’னா ‘சினிமா மேக்னட்’. நான் அந்த அர்த்தத்துல தான் சொன்னேன். நீங்க வேற எதையாவது நெனைச்சிறாதீங்க. தேர்தல் வேற வருது… என்று உட்கார்ந்தார்.
அதைக்கேட்டு ராதிகா சிரிக்க, பின்னர் பேசிய எஸ்.ஏ.சி, பா.விஜய்யை ஒரு பிடி பிடித்தார்.
ராதிகாவை ‘சின்னத்திரை சி.எம்’னு சொல்லிட்டு அப்புறம் ஏன் அதை வேற அர்த்தத்துல சொன்னேன்னு பயப்படுறீங்க. அதெல்லாம் பயப்படாதீங்க. ராதிகா சின்னத்திரையோட சி.எம் தான்னு தைரியமா சொல்லுங்க. நான் சொல்கிறேன் ராதிகா சின்னத்திரையோட சி.எம். தான். அவரோட சித்தி சீரியலை இன்னைக்கும் ஞாபகத்துல வெச்சுக்காதவங்களே இருக்க முடியாது. இப்போ வாணி-ராணி சீரியல் நல்லா போய்க்கிட்டிருக்கு என்றவர் என்ன பா.விஜய் நான் உங்களை ரொம்ப தைரியசாலின்னு நெனைச்சேன். நீங்க இப்படி பயப்படுறீங்க… என்று கமெண்ட் அடித்தார்.
இல்லை சார், தேர்தல் வருதுல்ல… அதனால தான் என்று சொல்லி சமாளித்தார் பா.விஜய்.
எப்படியோ ஆட்சியில உட்காரப் போறவங்க கொடைச்சல் குடுக்காம இருந்தா சரி!