கடனில் தத்தளிக்கும் எஸ்.ஜே.சூர்யா? : கால்ஷூட் கொடுப்பாரா விஜய்?

ஹீரோ ஆசை தலை தூக்கவும் மற்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் மகத்தான வேலைக்கு குட்பை சொன்னார் எஸ்.ஜே. சூர்யா. அதுதான் இப்போது அவருக்கு பெருத்த தலைவலியாக மாறி நிற்கிறது.
‘அன்பே ஆருயிரே’ படத்துக்குப் பிறகு பல வருடங்கள் இடைவெளி விட்டவர் மீண்டும் ‘இசை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்தார். தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பதால் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் மேல் கடன்களை வாங்கி அந்தப்படத்தை பிரம்மாண்டமாக எடுத்தார்.
நல்ல திரைக்கதை அம்சமுள்ள திரைப்படம் என்கிற பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூலைப்பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர் மற்ற இயக்குநர்களின் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி வருகிற வருமானமும் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டவே சரியாகப் போய் விடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர் விஜய்யின் கால்ஷூட்டுக்காக காத்திருக்கிறார்.
விஜய்யின் 60-வது படத்துக்கு போட்டி போட்ட இயக்குநர்கள் லிஸ்ட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் அடிபட்டது. ஆனால் விஜய்யோ அழகிய ‘தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட்டார்.
இப்போது விஜய் ஒரு படத்துக்கு தேதி கொடுத்தால் மட்டுமே வாங்கிய கடன் பிரச்சனைகளிலிருந்து மீள முடியும் என்று நினைத்தவர் அவரின் க்ரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவை ‘குஷி’ மூடுக்கு கொண்டு வருவாரா விஜய்?
வெயிட் பண்ணித்தான் பார்க்கணும்.