‘அவஞ்சர்ஸ் எண்ட்கேம்’ சாதனையை முறியடித்த ‘சாஹோ’!

Get real time updates directly on you device, subscribe now.

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் 300 கோடி ரூபாய் செலவில் சென்ற வாரம் வெளியான படம் ‘சாஹோ’.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த ‘சாஹோ’ இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது.

Related Posts
1 of 2,313

அந்த வகையில் இந்தியாவில் வெளியான ”அவஞ்சர்ஸ் எண்ட்கேம்” படத்தின் வசூல் சாதனையை சாஹோ படம் மிக எளிதாக முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 2-ம் தேதி திங்கள் கிழமையிலும் இந்தப்படம் 14.20 கோடியை குவித்துள்ளது. மொத்தத்தில் படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து 330 கோடியை குவித்துள்ளது.

ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், ஜங்கி பாண்டே, மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அருண் விஜய், முரளி சர்மா முதலான மிகப்பெரும் இந்திய நடசத்திரங்கள் பிரபாஸுடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.