‘ஏ1’ எந்த மாதிரியான படம்? – சந்தானம் ஓப்பன் டாக்
‘தில்லுக்கு துட்டு 2′ படம் ஹிட்டடித்த சந்தோஷத்தில் அடுத்த படத்தின் ரிலீசுக்கு தயாராகி விட்டார் சந்தானம்.
‘ஏ1’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் இப்படம் வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீசாகிறது.
அறிமுக இயக்குனர் ஜான்சன் கே கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிசா பெரி நடித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி சந்தானம் நம்மிடம் பேசியதாவது, “தில்லுக்கு துட்டு 2” படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. 2000-ம் ஆண்டு தான் நான் டிவியில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை.
இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப் படத்தின் கலர் மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார்.
ஒரு பிராமின் பொண்ணுக்கும், லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவு செய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.