சப்தம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சப்தம் என்ற டைட்டிலுக்கு ஏற்ப கதை இருக்கு.. நல்லாருக்கா?

மூணாறில் ஒரு கிறிஸ்தவ கல்லூரி. அங்கு படிக்கும் இரு மாணவிகளும், ஒரு மாணவனும் இறந்து போகிறார்கள். அதற்கான காரணம் என்ன? என்று கண்டுபிடிக்க கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார் ஆதி. அவர் கண்டு பிடிப்பின் ஆதியந்தம் என்ன? என்பதே படத்தின் திரைக்கதை

ஆதி தன் கேரக்டருக்கான நியாயத்தைப் படத்தில் செய்துள்ளார். எமோஷ்னல் காட்சிகள் ஈரம் படம் அளவிற்கு இதில் வொர்க் ஆகவில்லை என்பதால், அந்த காட்சிகளில் ஆதியால் ஸ்கோர் செய்ய இயலவில்லை. லெட்சுமி மேனென் கேரக்டர் வலுவாக அமைந்திருக்கலாம். சிம்ரன் தரமாக நடித்துள்ளார். தாய்மையைச் சுமக்கும் அவரது கண்களே கதை பேசுகிறது. லைலா கேரக்டர் துளியும் ஒட்டவில்லை

Sync cinema என்ற சவுண்ட் டிசைன் டீம் தாறுமாறாக உழைத்துள்ளனர்..படத்தின் ஒட்டுமொத்த உழைப்பும் சவுண்ட் டிப்பார்ட்மெண்டிலே தெரிகிறது. ஒலிக்கலவை செய்த உதயகுமார் டீமும் வெறித்தனம். தமன் தன் இசையை ஹாரர் படத்திற்கு தகுந்தவாறு அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபன் விஷுவலில் நல்ல நல்ல சம்பவங்களைச் செய்துள்ளார்.

தொழில் நுட்ப வல்லுனர்களின் சிறப்பான உழைப்பால் ஒரு ஹாலிவுட் ரேஞ்சிற்கான படத்தை கண்ணில் காண முடிகிறது. அதே சமயம் எமோஷ்னல் கனெக்சன் இல்லாத கதையும் திரைக்கதையும் நம்மைச் சோதித்து அனுப்புகிறது. இன்னும் நல்ல கதை திரைக்கதையோடு இந்தப் படத்தை இயக்குநர் அறிவழகன் அணுகியிருந்தால் ஈரம் போல ஒரு sure shot hit கிடைத்திருக்கும்
2.5/5