26 நாள் படப்பிடிப்புக்கு 6 மாதங்கள் பயிற்சி எடுத்த ஹீரோ!

Get real time updates directly on you device, subscribe now.

reengaram

மொத்த படப்பிடிப்பையும் 26 நாட்களுக்குள் முடித்து விட்டார் இயக்குநர். ஆனால் அதில் ஹீரோவாக நடித்தவர் அதற்காக 6 மாதங்கள் பயிற்சி எடுத்த அதிசயம் நடந்திருக்கிறது ரீங்காரம் படப்பிடிப்பில்.

ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ​ஸ்டூடியோ​ ​இணைந்து தயாரிக்க, புதுமுக இயக்குநர் சிவ கார்த்திக் இயக்கி வரும் படம் தான் ‘ரீங்காரம்’.

புதுமுகம் பாலா கதானாயகனாக நடிக்க அவருக்கு ஜோடி ‘கங்காரு’, ‘வந்தாமல’ படங்களில் நடித்த பிரியங்கா.

படத்தைப் பற்றி இயக்குனர் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோதுதான் அந்த அதிசய தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ரீங்காரம் இருக்கு. அவரவர்களின் எண்ண அலைகளைத்தான் ரீங்காரம் என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான நகைச்சுவையும், அடி மனசு வலிக்கிற மாதிரியான நிகழ்வுகளும், பார்த்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற அழகும், மறக்கவே முடியாத அமைதியும், கலையா மதிக்கிற காதலும் சரிவர கலந்து திரைக்கதையை மட்டுமே முழுமையா நம்பி பிண்ணப்பட்ட கதை தான் இந்த ரீங்காரம்.

26 நாள்ல முழுப் படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம், இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. என்றவர் இந்தப்படத்தின் ஹீரோ பாலாவுக்கு சுமார் 6 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்தோம்.. என்றார். காரணம், படம் முழுவதுமே வசனங்களுக்கு வேலை. எக்ஸ்பிரசன்ஸ் காட்ட வேண்டிய காட்சிகள் தான் அதிகம். அதற்காகத்தான் அவரைத் தயார் செய்ய ஆறு மாசமாச்சு……

என்றவர் லெக்கின்ஸ் காலத்தில் கவர்ச்சியே இல்லாம படம் செய்வது மிகப்பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணிருக்கோம்ங்கிறது மிகப்பெரிய சந்தோஷம். “வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது… அந்த யூகிக்க முடியாத திசையோட ஒரு பக்கம் தான் ரீங்காரம். ரீங்காரம் வெற்றிக்கான அங்கீகாரமாக மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார் சிவகார்த்திக்.​