விஷால் படத்துக்கு வரலட்சுமி சரத்குமார் கொடுத்த சர்ட்டிபிகேட்!
‘சண்டக்கோழி 2′ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் – இயக்குனர் என்.லிங்குசாமி அதன் இரண்டாம் பாகமான ‘சண்டக்கோழி 2’வில் இணைந்திருக்கிறார்கள்.
விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்… ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். இப்படத்தில் நான் கம்போர்ட் சோனிலிருந்து வெளியே வந்து நான் நடித்துள்ளேன்.
நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.
படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது இது மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும்” என்றார்.
வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.