சங்கத்தலைவன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

விடுதலையின் குறியீடு நீலம் என்றால்..அந்த விடுதலையை அடைய வைக்கும் போராட்டத்தின் குறியீடு சிகப்பு எனலாம். கம்யூனிச சிந்தனையுடன் முழு வீச்சில் போராட்டத்தின் மூலமே எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்று பேசியிருக்கும் படம் சங்கத்தலைவன்.

படத்தின் நாயகன் கருணாஸ் பெரு முதலாளி ஆன மாரிமுத்துவிடம் தறி நெய்யும் வேலை செய்கிறார். அங்கு உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு கை போய்விட..அதற்கான நீதியை மாரிமுத்து மறுக்க..கருணாஸ் தொழிலாளர்கள் சங்கத்தலைவனான சமுத்திரக்கனியை நாடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்தாலும்..தொழிலார்களுக்கான ஏனைய உரிமைகளை எல்லாம் சமுத்திரக்கனியும் கருணாஸும் சேர்ந்து பெற்றார்களா…இடையில் தறியாலையில் பூத்த கருணாஸின் காதல் கை கூடியதா என்பதற்கான விடையே சங்கத்தலைவன் கதை

படத்தின் மெயின் பார்ட்டில் நடித்துள்ள கருணாஸும் சமுத்திரக்கனியும் அந்தந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். நாயகிகள் சோனுலக்‌ஷ்மியும் ரம்யாவும் மிக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தறியாலை முதலாளியாக வரும் மாரிமுத்து அந்தக் கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

ராபார்ட்டின் பின்னணி இசையில் பறையின் அதிர்வு படம் முடிந்த பிற்கும் அப்படியே இருக்கிறது. ஒளிப்பதிவில் போராட்டத்தின் கணல் அப்படியே பிரதிபலிக்கிறது. படத்தின் பின்பாதியில் மட்டும் இன்னும் இயல்பை கொண்டு வந்திருக்கலாம்.

ஊழலும் அதிகாரமும் போராட்டத்தால் அடக்கப்பட வேண்டியவை என்ற கருத்தை விறுவிறுப்பு குறையாமல் பதிவு செய்த மணிமாறனுக்கும்..இன்றைய சூழலில் நமக்குத் தேவையான படத்தைத் தயாரித்துள்ள வெற்றிமாறனுக்கும் நல்லபடங்களைக் கொண்டாடும் ரசிகர்கள் சார்பாக பாராட்டும் வாழ்த்தும்!

RATING : 4/5