சூர்யா நடிக்கும் ‘சூர்யா 38’ படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

Get real time updates directly on you device, subscribe now.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதுப்படத்தை சுதா கோங்கரா இயக்குகிறார்.

சூர்யாவின் 38-வது படமான இப்படத்துக்கு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘சூர்யா 38’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று ஏப்ரல் 7-ம் தேதி நடந்தது. படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்குகிறது.

Related Posts
1 of 165

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட் குணீத் மோங்காவும் இப்படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களோடு நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்கு பெறுகிறார்கள்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார்.