சென்னை பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளும் குட்டீஸ் கொண்டாட்டம் ‘சங்கு சக்கரம்’

Get real time updates directly on you device, subscribe now.

ட்ஜெட் படம் என்கிற அடையாளத்தையும் தாண்டி விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பிற்காகவே சில படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும். அந்த பட்டியலில் குட்டீஸ்களின் கொண்டாட்டமாக சென்ற வார ரிலீஸில் வந்திருக்கும் படம் ‘சங்கு சக்கரம்.’

லியோ விஷன் மற்றும் சினிமாவாலா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை மாரிசன் இயக்கியிருக்கிறார். திலீப் சுப்பராயன், கீதா, ஆகியோருடன் குட்டி நட்சத்திரங்களான பேபி மோனிகா, தீபா, ஜெனிபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக், ஆதித்யா, அஜீஸ், ஆதர்ஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பேய்ப்படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்கிற வழக்கமான ஃபார்முலாவை மாற்றி புதுமையான இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்ததோடு, பெண்களும், பெரியவர்களும் தங்கள் வீட்டு குழந்தைகளுடன் சேர்ந்து வந்து ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

அந்த வித்தியாசமான திரைக்கதை அமைப்பே இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற காரணமாக இருந்ததோடு சென்ற வாரம் சென்னை பாக்ஸ் ஆபீஸ் அதிக வசூலைப் பெற்று டாப் 5 பட்டியலில் ‘சங்கு சக்கரம்’ படமும் இடம் பிடித்துள்ளது.

வேலைக்காரன், ‘டைகர் ஜிந்தா ஹை’ போன்ற மாச் ஹீரோக்களின் படங்களில் வரிசையில் குழந்தைகள் நடிப்பில் வந்திருக்கும் ‘சங்கு சக்கரம்’ படமும் இடம் பிடித்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இந்தப்படம் உலகமெங்கும் உள்ள தியேட்டர்களில் இந்தப்படம் இரண்டாவது வாரமாக வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.