”வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை” – உதயநிதி ஓப்பன் டாக்!

Get real time updates directly on you device, subscribe now.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

“இதற்கு முன்பு என் பல படங்களின் பல பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பல விஷயங்களைப் பற்றி மனசாட்சியே இல்லாமல் நல்ல படங்கள் என்று பேசியிருக்கிறேன். ஆனால் இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Related Posts
1 of 15

என் குழந்தை பருவ தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்திருக்கிறார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது சீனு ராமசாமி சார் படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் பெண்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இறுதியில் எனக்கும் வடிவுக்கரசி அம்மாவுக்கும் ஒரு உணர்ச்சிகரமான காட்சி இருக்கிறது. அது மறக்க முடியாதது.

முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு தான் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நான் இன்னும் ஒரு படத்தில் சீனு சார் உடன் இணைந்து பணியாற்றுவேன். மனிதன் மற்றும் நிமிர் படங்களுக்கு பிறகு எந் கேரியரில் இந்த படம் பாராட்டப்படும் ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.