தமிழில் நோ சான்ஸ் : தெலுங்கில் பிஸியானார் ‘பிச்சைக்காரன்’ நாயகி!

Get real time updates directly on you device, subscribe now.

satna

‘பிச்சைக்காரன்’ நாயகி சாட்னாவுக்கு அதுதான் தமிழில் முதல் படம் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே குரு சுக்ரன் என்ற படத்தில் நடித்தவர் தான். அந்தப்படம் சரியாகப் போகாததால் அடுத்து வந்த பிச்சைக்காரன் படத்தை தனது முதல் படமாக்கி விட்டார்.

படம் ஹிட்டானதில் விஜய் ஆண்டனி ஹேப்பியாக இருக்கிறார். நாயகி சாட்னாவுக்கோ இதுவரை தமிழில் எந்த வாய்ப்பும் வரவில்லை. தமிழ் கை விட்டாலும் அதே பிச்சைக்காரன் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரில் ரிலீசாகி ஹிட்டாகி விட்டது. இதனால் சில புதிய தெலுங்கு பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்திருக்கிறது.

தெலுங்கில் போனால் கவர்ச்சி காட்ட வேண்டுமே?

அதற்கும் ஓ.கே சொல்லி பட வாய்ப்புகளுக்கான அட்வான்ஸ்களை வாங்கிப் போட ஆரம்பித்திருக்கிறார்.

பொழைக்கிற புள்ள…