“செம்பி”பிப்ரவரி 3ல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் ‘செம்பி’ திரைப்படத்தைப் பிப்ரவரி 3 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தில் நடிகை கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு (நிலா) நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாய் (கோவை சரளா) என்ற பழங்குடியினப் பெண்ணைப் பற்றியது தான் இந்த சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான திரைப்படம்.
தமிழின் முன்னணி இயக்குநரான பிரபு சாலமனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘செம்பி’ பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்துள்ளது. தமிழ் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகை கோவை சரளா இதுவரையிலும் கண்டிராத வித்தியாசமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.