ஹிந்தியில் படமாகும் ஷகிலாவின் பெர்சனல் வாழ்க்கை!

Get real time updates directly on you device, subscribe now.

shakeela

ரு காலத்தில் மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் மம்முட்டி, மோகன் லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களையே வசூலில் மண்ணை கவ்வ வைத்தவர் கவர்ச்சிப் புயல் ஷகிலா.

அவருடைய கவர்ச்சி ஆட்டத்தை தாங்க முடியாத மலையாளத் திரையுலகம் ஒன்று திரண்டு அந்த மாதிரி படங்களுக்கு தடை விதிக்கச் சொல்லவும் ஷகிலாவின் மார்க்கெட் டவுணாகி தமிழ்நாட்டுக்கு வந்தார்.

இங்கு அவ்வப்போது சில படங்களில் டீசண்ட்டான கேரக்டர்களில் நடித்து வருகிறார். என்றாலும் தனது வாழ்க்கையைப் பற்றி சுயசரிதை ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது அந்த வாழ்க்கையை படமாக்க பலரும் போட்டி போட்டி வந்த நிலையில் அவருடைய வாழ்க்கையை ஹிந்தியில் இந்திரஜித் லங்கேஷ் என்ற இயக்குநர் படமாக எடுக்கப் போவது முடிவாகியிருக்கிறது.

ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி இதில் நாயகியாக நடிக்க நடிக்க ஓகே சொல்லி விட்டாராம்.

பொதுவாகவே நடிகைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி வரும் படங்களுக்கு மைய அரசின் உயரிய விருதான தேசிய விருது கிடைத்து வருகிறது. அப்படித்தான்

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்காக தேசிய விருது கிடைத்தது. அதே போல, தனக்கும் இந்தப் படத்தில் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஷகிலாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ஹூமா குரேஷி.

அப்போ ரசிகர்களுக்கு செம குஷி!