மச்சான் அஜித் அப்படி; மச்சினிச்சி ஷாம்லி இப்படி : என்னதான் நடக்குது ஷூட்டிங் ஸ்பாட்ல..?

Get real time updates directly on you device, subscribe now.

ajith

டிப்பது தமிழ்ப் படங்களில், வசிப்பது தாய்லாந்தில் என்று சொன்னால் ரசிகர்கள் மட்டுமல்ல, அஜீத்தே கூட கோபப்பட மாட்டார்.

அப்படித்தான் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற குறுகிய மனநிலையோடு வாழ்ந்து வருகிறார்.

சிலர் இது ரொம்ப ஓவர் என்று விமர்சனம் செய்தாலும், பலர் அட அஜித் மாதிரிதான் இருக்கணும் என்று ஆதரவு கரம் நீட்டுகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நல்லவர் என்று பெயரெடுத்த அஜித்துக்கு சக நடிகர்களே திரையுலகில் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கிறார் அஜித். அவர் இப்படியென்றால் அவரது மச்சினிச்சி ஷாமிலியோ அதற்கு நேர்மாறாக இருக்கிறாராம்.

ஷாமிலியின் கதாநாயகி அறிமுகம் தெலுங்கில் எதிர்ப்பார்த்தது போல அமையாவிட்டாலும், விக்ரம்பிரபுவுடன் ஜோடி சேர்ந்து தமிழில் ஒரு ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.

Related Posts
1 of 58

தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிந்ததும் தனுஷின் ‘கொடி’ படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக கமிட் செய்தார்கள்.

இதே படத்தில் நடித்து வரும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டு விட்ட நிலையில், ஷாம்லி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. அது எடுக்கப்பட இருந்த நிலையில் திடீரென்று இப்போது படத்திலிருந்து அவரை நீக்கி விட்டு விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியனை கமிட் செய்திருக்கிறார்கள்.

ஷாமிலி ஏன் இந்த திடீர் நீக்கம்? என்று விசாரித்தால் படப்பிடிப்பில் அவர் கொடுக்கும் அளப்பறைகளை பட்டியலிட்டு பகீர் கிளப்புகிறார்கள்.

படப்பிடிப்புக்கு வந்தால் அவருடன் அவருடைய அம்மா மட்டும் வருவதில்லை.  அரட்டை அடிக்க கூடுதலாக நண்பர்கள் நான்கைந்து பேர்களையும் போகிற இடங்களுக்கெல்லாம் பேக்கப் செய்துகொண்டு வருகிறாராம். அவர்களுக்கும் நட்சத்திர விடுதியில் தங்கும் அறைகள் முதற்கொண்டு சாப்பாடு, தண்ணி வரை எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டி விடுகிறார்.

ஏற்கனவே சம்பளம் போக, படப்பிடிப்புக்கு வந்து போவது வரை கூடுதல் செலவு தயாரிப்பாளர் கையைக் கடித்துக் கொண்டிக்க, இதென்ன எஸ்க்ட்ரா பிட்டிங்குகள் என்று மிரண்டு போன தயாரிப்பாளர் ஷாமிலியை நீக்கிவிடச் சொன்னதாக சொல்கிறார்கள்.

மச்சான் அஜித் அப்படி!; மச்சினிச்சி ஷாம்லி இப்படி!! என்ன ஒரு காம்பினேஷன்!