சண்முகப் பாண்டியனுடன் வெள்ளைக்காரப் பொண்ணு! – யாருப்பா அது? கேப்டனோட மருமகளா?

Get real time updates directly on you device, subscribe now.

‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன்.

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

மூன்றாவதாக அப்பா விஜயகாந்துடன் “தமிழன் என்று சொல்” என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Posts
1 of 3

அந்த இடைவெளியில் அமெரிக்காவுக்கு நடிப்பு உள்ளிட்ட சினிமாவுக்கு தேவையான சகலத்தையும் கற்றுக் கொண்டு வரச் சென்றவர் தான் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

“அதில் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றும் போட்டு ஸ்மைலி ஒன்றை போட்டிருக்கிறார். ஆனால் அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் பெயரும் இல்லை, யார் என்பது பற்றிய விபரமும் இல்லை. இதனால் ஒருவேளை இவர் தான் விஜயகாந்தின் மருமகளா இருப்பாரோ என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள்.