விஷ்ணுவர்தனின் ஹிந்திப்படம்

அஜித்தை வைத்து பில்லா படத்தைக் கொடுத்த விஷ்ணு வர்தன் தற்போது இந்திப்படம் ஒன்றை இயக்குகிறார்
மாடர்ன் தொழில்நுட்பத்தில், இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படம் “ஷெர்ஷா” என தலைப்பிடப்பட்டுள்ளது.
கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்வை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலக்கலான வடிவமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.