டகால்டிக்கு வழி விட்டார் சர்வர் சுந்தரம்

Get real time updates directly on you device, subscribe now.


சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர்.

Related Posts
1 of 9

பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய அவர்கள் டகால்டி படம் முதலில் வரும் என்றும் அதாவது 31.01.2020 அன்று டகால்டி படமும், 14.02.2020 அன்று பிப்ரவரி சர்வர் சுந்தரம் படமும் வெளியாகும் என்று தெரிவித்தார்கள்