சிம்புவுக்கு ஆகஸ்ட் மாதம் கல்யாணம்! – பொண்ணு யாரு தெரியுமா?
சிம்புவுக்குப் பிறகு நடிக்க வந்த தனுஷ், பரத், பிரசன்னா, அருண் விஜய் என பல இளம் ஹீரோக்கள் திருமணம், குழந்தை என்று குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள்.
ஆனால் சிம்பு மட்டும் இன்றுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். இடையில் நயன்தாரா, ஹன்ஷிகா ஆகியோர்களுடன் தொடர்ந்த அவருடைய டீப்பான காதலும் அடுத்தடுத்து முறிந்து போனதால் அப்செட்டில் இருந்தார்.
அண்மைக்காலமாக நல்ல பிள்ளையாக படங்களில் நடித்து வருகிறார். பல பொதுப்பிரச்சனைகளில் குரல் கொடுத்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு இஸ்லாமியப் பெண் ஒருவருடன் திருமணம் நடை பெற்றது.
இதையடித்து சிம்புக்கு எப்போது திருமணம் என்று பலரும் டி.ஆரிடம் கேட்டார்கள். விரைவில் அதைப் பற்றி சொல்வோம் என்று சொன்ன நிலையில் தற்போது சிம்புவுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறது சிம்புவின் குடும்பம்.
சிம்புவின் வாழ்க்கைத் துணைவியாக வரப்போகிறவர் சினிமாத்துறைய சேர்ந்தவர் இல்லை. மாறாக அவருடைய அம்மா உஷாவின் உறவுக்கார பெண் என்கிறார்கள்.
வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் டி.ஆர் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பாராம்.