நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் சிம்பு : எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ டைரக்டர் தானாம்?!

‘அடல்ஸ் ஒன்லி’ படமெடுக்கத்தான் நான் லாயக்கு என்று எல்லோரும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த எண்ணத்தை சிம்புவை வைத்து நான் எடுக்கும் ”அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் முழுமையாக மாற்றி விடும் என்று கொஞ்சம் தெனாவெட்டாகவே ரிலீசுக்கு முன்பு பேசினார் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படம் ரிலீசான பிறகோ பார்த்த ரசிகர்கள் ”நீ பிட்டு படம் எடுக்கத் தான் லாயக்கு, திருந்தவே மாட்டே… ” என்று காரித்துப்பாத குறையாக கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள்.
ஆதிக் செய்த அந்த கொடுஞ்செயலால் ஏகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நாறிக்கிடப்பது ஆதிக் பெயர் மட்டுமல்ல.., ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிம்புவுக்குக் கிடைத்த நல்ல பெயரும் தான்.
எந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு உயர்ந்து இருந்ததோ? அதை அப்படியே காலி செய்து விட்டது ”அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம். படத்தை ஆவலோடு தியேட்டர்களுக்குச் சென்று பார்த்த சிம்பு ரசிகர்களே அவரைத் திட்டித் தீர்த்து விட்டனர்.
ஏற்கனவே தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. என் ரசிகர்களுக்காகத்தான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிம்பு ”ஏஏஏ” படத்தைப் பார்த்து தனது ரசிகர்கள் கோபத்துக்குள்ளானதும் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
ஆமாம், இனி படங்களில் நடிப்பது வேண்டாம் என்பது தான் அந்த முடிவாம்.
இனிமேல் படங்கள் டைரக்ஷன் செய்வது, அல்லது மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைப்பது என தனக்கு செளகரியமான இரண்டு வேலைகளை மட்டும் செய்யப் போகிறாராம். ஏற்கனவே சந்தானம் நடிக்கும் ”சக்க போடு போடு ராஜா” படத்துக்கு இசையமைத்து வருகிற சிம்பு, அதைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து ஒரு படத்தையும் இயக்கப் போகிறாராம்.
ஒரே ஒரு படம், ஒரு மனுஷனை இப்படியா மாத்தணும்?