சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தக்காலம் இருக்கே காலம். அது பல புதுமைகளை நமக்கு அறிமுகம் செய்துகொண்டே போகும். நாம் இதுதான் நமக்கு என ஏற்றுக்கொண்ட ஒரு உறவுக்கு கூட திடீரென ஒரு மாற்றை கொண்டுவரும் காலம். அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். திரைப்படங்களிலும் அப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான முயற்சி சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்.

முரட்டு சிங்கள்களுக்காக ஒரு செயற்கையான பெண்போனை உருவாக்குகிறார் பகவதிபெருமாள். அது திருடு போகிறது. திருடுபோன் அந்த அறிவியல் உணர்ச்சி வஸ்து டெலிவரி பாயான மிர்ச்சி சிவா கையில் கிடைக்க, அடுத்தடுத்து என்ன என்பதே படத்தின் கதை

சிம்பிளாக நடித்துக் கொடுக்கும் கேரக்டர் என்பதால் சிவா அசால்டாக ஸ்கோர் செய்கிறார். வழக்கம் போல அவரது டயலாக் மாடுலேசன்களுக்கு அப்ளாஸ் கிடைக்கிறது. பட் இதுமட்டுமே போதுமா ப்ரோ? அவரைத் தொடர்ந்து காமெடியில் மனோ அசத்தியுள்ளார். அவரை தமிழ்சினிமா இன்னும் நன்றாக பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். ஏனைய கதாப்பாத்திரங்கள் யாவரும் கொடுத்த வேலைக்கு குந்தகம் விளைவிக்காமல் நடித்துள்ளனர்.

CG காட்சிகளில் பட்ஜெட் பல்லிளித்தாலும் மற்ற டெக்னிஷியன்கள் சொல்லியடித்துள்ளனர். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே ஓரளவு ஓகே ரகம். ஒருபாடல் மட்டும் கேட்கும் ரகம். இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தாற் போல் ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன்

எண்டெர்டெயின்மெயிண்ட் இல்லை என்றால் எந்தத்திரைப்படமும் தாங்காது. அதனால் இப்படத்தில் சில காட்சிகளை வலிந்து திணித்து எண்டெர்டெயின்மெண்ட் காட்சிகளாக மாற்றியுள்ளனர். அது ஓரளவே கை கொடுத்துள்ளது. போகிற போக்கில் அடிக்கும் சில காமெடிகள் மட்டுமே வொர்க்கவுட் ஆகியுள்ளது. இன்னும் அதீத ஈடுபாட்டோடு திரைக்கதையை அமைத்திருந்தால் படமும் அதிகமாக கவர்ந்திருக்கும்
2.5/5