சிவகாமி ஆடியோ விழா

தெலுங்கில் வெற்றி பெற்ற நானி படத்தை தமிழில் மொழிமாற்றப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறார்கள். “சிவகாமி” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹாரர் பக்தி வகை சார்ந்த திரைப்படம்.
மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து “சிவகாமி” தயாராகியுள்ளதாக கூறுகிறார்கள்.
இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (27.02.2020) அன்று சென்னையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி ஆகியோர் படம் பற்றி பாசிட்டிவாக நிறைய விசயங்களைப் பேசினார்கள்