ரஜினி அரசியலுக்கு வரணும்; இல்லேன்னா? : நோட்டீஸ் ஒட்டி மிரட்டும் சாமியார்!

‘‘30 வருஷமா இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே? அந்த ஆண்டவன் என்ன இன்னுமா முடிவெடுக்கல..”
”நான் அரசியலுக்கு வருவதைப் பற்றி ஆண்டவன் தான் முடிவு செய்யணும்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் உடனான சந்திப்பில் ரஜினி பேசிய பேச்சுக்கு வந்த நக்கலான பதில் கமெண்ட் தான் இது.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு மீடியாக்கள் மேடைகளை அமைத்து விவாதங்களை செய்ய ஆரம்பித்திருப்பதும், பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதும் வழக்கமானது தான் என்றாலும் இந்த முறை ரஜினியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் பலபேர் மத்தியில் பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு திராவிட கட்சிகளின் ஆளுமை இல்லாமல் இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே ரஜினியின் இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் கூட இந்த முறை பரவலாக விவாதப் பொருளாகியிருக்கிறது.

ரஜினி ரசிகர்களுக்கு அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்கிற ஆசை பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இல்லையேல் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் என்று பிட் நோட்டீஸ் போட்டு மிரட்டியிருக்கிறார் ஒரு சாமியார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த அருணகிரி என்ற சாமியாரான அவர் சார்பில் விநியோகம் செய்யப்பட்டிருக்கும் பிட் நோட்டீஸில் ”ரஜினிகாந்த அரசியலுக்கு வரவேண்டும். ஏனெனில் அவர் வராத காரணத்தினால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வர கால தாமதமாக்கினால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் கடுமையான வறட்சி ஏற்படும். மழை பெய்யாது. நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதுக்காவது ஆண்டவன் ஒரு நல்ல முடிவைச் சொல்லுவாரா?