கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சில வெள்ளிக்கிழமைகள் எதிர்பாராத விதமாக நம்மை ஆச்சர்ப்படுத்தும். அப்படியொரு ஆச்சர்யம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம்.

ஆப் டெவலப்பர் துல்கர் சல்மான், அனிமேஷன் ஆர்ட்டிஸ் ரக்‌ஷன் இருவரும் நண்பர்கள். ஜாலியாக நாட்களைக் கடத்துகிறார்கள். துல்கருக்கு ரிதுவர்மா மீது ஓர் காதல். இப்படி கலர்புல்லாக பயணிக்கிற படம் ஒரு இடத்தில் வேறோர் பரிணாமத்தை அடைகிறது. துல்கருக்கும் ரக்‌ஷனுக்கும் தவறான வழியில் பணம் வருகிறது எனத் தெரிய வருகிறது. அடுத்து ஏ.சி பி-யாக கெளதம் மேனன் வருகிறார். அடுத்தடுத்து சில அதிரடியான சம்பவங்கள் என பரபர பப்ஸி கேம் போல் படம் முடிவை எட்டுகிறது.

நாயகனாக துல்கர் சல்மான் அதகளப்படுத்தியுள்ளார். அவரின் கேரக்டரை நமக்குள் முழுதாக கடத்தி விடும் வித்தை அவருக்கு வாய்த்திருக்கிறது. ரஜ்ஷனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல அடையாளம். படத்தின் இரண்டாம் ஹீரோ என்றால் அது கெளதம் மேனென் தான். படத்தில் அவருக்கான காட்சிகளை அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸால் அட்டகாசப் படுத்தியுள்ளார். ரிதுவர்மாவும் மற்றொரு நாயகி நிரஞ்சனி அகத்தியனும் நீட் (நல்ல) தேர்வு.

இப்படியான திரில்லர் வகைப் படத்திற்கு தரமான இசையும் ஒளிப்பதிவும் அவசியம். அவை செவ்வணே செய்யப்பட்டுள்ளது. இடைவேளைக்குப் பிறகு படம் சற்று மெல்லநடை போட்டாலும் படத்தில் தேவையில்லாத காட்சி என்று ஒன்றுகூட இல்லை.

இயக்குநரின் ரைட்டிங் லெவல் ஸ்ட்ராங்காக இருப்பதால் படமும் முடியும் வரை நல்ல எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கிறது.

3.5/5