அடிக்கடி போட்டோ ஷூட் – அமலாபாலுக்கு என்னாச்சு?
‘மைனா’ படத்தில் மூன்றாம் கட்ட நடிகையாக அறிமுகமானவர் அமலாபால்.
அப்படத்தின் மாபெரும் வெற்றியால் விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையானார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திடீரென்று இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து அதே வேகத்தில் விவாகரத்தும் செய்தார்.
திருமணத்துக்குப் பிறகும் கதாநாயகியாக நடிக்க விரும்பியதால் தான் விஜய் உடனான திருமண உறவு முடிவுக்கு வந்ததாக அப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஒரு சில படங்களில் தலைகாட்டியவர் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிப்படங்களிலும் படுகவரச்சியாக நடித்து வந்தார்.
இருந்தாலும் முன்பு போல் அமலாபாலுக்கு புதுப்பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. அதுவும் முன்னணி ஹீரோக்கள் யாருமே அமலாபாலுடன் ஜோடி போட விரும்பவில்லை.
இதனால் அப்செட்டில் இருந்தவர் மீண்டும் பட வாய்ப்புகளாக சமீபகாலமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள அக்கவுண்ட்டுகளில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட சேலை அணிந்து கொண்டு தன் பின்முதுகு முழுவதுமாக தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை ரிலீஸ் செய்தார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் நெட்டிசன்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர்களோ ”ஏம்மா உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?” என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பட வாய்ப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?