அய்யய்ய… என்னப்பா இது? ‘புன்னகை அரசி’ சினேகா இப்படி இருக்கு!
திருமணத்துக்குப் பிறகு விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் சினேகா.
மகன் விஹான் வருகைக்குப் பின்னர் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் நடிப்புக்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வரும் அவர் அதற்காக தனது வழக்கமான லுக்கையும் மாற்றியிருக்கிறார்.
அவருடைய அந்த மாற்றப்பட்ட லுக்கைப் பார்த்து தான் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

சில தினங்களுக்கு முன்பு இதுதான் என்னுடைய லேட்டஸ்ட் லுக் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை சினேகா. அதில் தனது அழகான தலைமுடியை நறுக்கி குட்டையாக்கியிருக்கிறார். அந்த குட்டையான தலைமுடியுடன் சினேகாவைப் பார்க்கவே ரசிகர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது.
அது ஒரு பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றாலும், அதில் வெட்டப்பட்ட தலைமுடியுடன் சினேகாவைப் பார்க்கவே ரசிகர்களுக்கு ரொம்பவே வித்தியாசமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறதாம்.
தலைமுடியை கட் செய்தால் சிலருக்கு நன்றாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் நன்றாக இருக்காது.
அதிலும் புன்னகை அரசியான சினேகாவுக்கு நீளமான தலைமுடி தான் பார்க்க அழகாக இருக்கும். அப்படியிருக்கும் போது யார் இப்படி ஒரு கேவலமான ஐடியாவைக் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமில்லாமல் ”அய்யய்ய… என்னப்பா இது? ‘புன்னகை அரசி’ சினேகா இப்படி இருக்கு!” என்றும் திட்டித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள்.