சினேகா – பிரசன்னா வாழ்க்கையில் விரிசல்! : இதற்கும் தனுஷ் தான் காரணமா?

Get real time updates directly on you device, subscribe now.

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் சேர்ந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காதலாகி குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் சினேகா – பிரசன்னா ஜோடி.

இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் இருக்கின்ற நிலையில் இருவருமே சில ஆண்டுகள் மனம் ஒத்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்தி உலாவந்து கொண்டிருக்கிறது.

இவர்களின் இந்தப் பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே சினேகா சொந்தப்படத் தயாரிப்பில் இறங்கியது தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு புதுப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தனது கணவர் பிரசன்னாவை வைத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் சினேகா.

Related Posts
1 of 40

ஆனால் அதற்கான பணத்தேவை எதிர்பார்த்தபடி சினேகாவுக்கு அமையவில்லை. அதோடு கையில் வைத்திருக்கிற பணத்தையும் தயாரிப்பில் போட்டு விட்டு அப்புறம் கண்ணீர் விட வேண்டாம் என்றும் நாலாபுறமும் எச்சரிக்கை வந்ததால் தயாரிப்பு வேலையை தள்ளி தள்ளி போட்டுக் கொண்டே வந்தார்.

இது ஒருபுறமிருக்க தனது படத்தயாரிப்புக்கு பண உதவி செய்யுமாறு நடிகர் தனுஷிடம் சினேகா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனுஷும் கண்டிப்பாக பண உதவி செய்கிறேன் என்று உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சினேகாவின் இந்த நடவடிக்கை பிடிக்காததாலேயே அவருக்கும், பிரசன்னாவுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சமீபகாலமாக கோலிவுட்டில் எந்த ஒரு ஜோடி பிரிந்தாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்று தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு ஜோடியின் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டிலும் தனுஷ் பெயர் அடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்போ இதற்கும் தனுஷ் தான் காரணமா?