லிப்ட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வீட்டுக்குள் பேய், ஊருக்குள் பேய், காட்டுக்குள் பேய், தியேட்டருக்குள் பேய் என பேய்கள் இல்லாத இடமே இல்லை என்ற சினிமாவில் லிப்டுக்குள் பேய் என்று ஒருபடம் வந்திருக்கிறது. நிச்சயமாக படத்தில் ஓர் தைரியம் இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டம் ஆரவாரம் எதுவுமில்லாமல் சுவாரசியமான திரைக்கதை எழுத ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

ஐடி கம்பெனிக்கு TL-ஆக முதல் நாள் வேலைக்கு வரும் கவின் இரவில் வேலையை முடித்துவிட்டு செல்லும் போது லிப்டுக்குள் மாட்டுகிறார். கூடவே அம்ருதா ஐயரும். இவர்களை மாட்ட வைத்திருக்கும் இரு பேய்களின் அஜண்டா என்ன? அதன் பின்கதை என்ன? என்பதற்கான பதில் லிப்டில் இருக்கிறது.

நாயகன் கவினை தனது அநாயசமான ரியாக்‌ஷன்களால் ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறார் நாயகி அம்ருதா ஐயர். கவின் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்ய பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் சொல்லிக் கொள்ளும் படியான கதாப்பாத்திரங்கள் இல்லை. படத்தின் மேக்கிங்கில் கவனம் செலுத்திய இயக்குநர் ஹியூமர் மற்றும் வசனங்களிலும் கவனம் செலுத்திருக்கலாம். முதலில் வரும் ஐடி கம்பெனி போர்சனில் எல்லாம் அவ்வளவு ஜவ்வ்வ்வ்

இந்தக் கதைக்குப் பின்னணி இசையின் முக்கியத்துவம் உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் இசைஞர். ஒளிப்பதிவிலும் நல்ல மெனக்கெடல் தெரிகிறது. குவாலிட்டியில் மிக நேர்த்தியான திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
முன்பாதியில் இருக்கும் இழுவையும் அங்கங்கே துருத்தி நிற்கும் லாஜிக் மீறல்களும் லிப்டை ஏறவிடாமல் தடுக்கின்றன…மற்றபடி ஒன் டைம் வாட்சபுள் மூவி தான்

3/5