சூரரைப்போற்று படத்தைப் பார்ப்பதற்கான 4 காரணங்கள்
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள்
இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும், சுவாரசியங்கள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. தங்களது சீட் பெல்டினை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ரசிகர்களும், அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இந்தக் கதையை அனுபவிக்கக் காத்திருக்கின்றனர்.
சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.
ஏன் சூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள் இதோ
1 – உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது – இந்தப் படம் எவ்வளவு தாகத்துடன் உருவாகியுள்ளது என்பதே குறிப்பிட்டுப் பேச வேண்டிய விஷயம். நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இயக்குநர் சுதாவும் அவரது அணியும் தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம் செலவிட்டுள்ளனர். தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து அதை இன்று சூரரைப் போற்று இருக்கு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் சாரத்துக்கு உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
2 – பரபரப்பான கதை – சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும்.
3 – தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் – அமேசான் ப்ரைம் வீடியோவுடன், இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது. உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறந்த இந்த அட்டகாசமான ஆக்ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது இன்னொரு காரணம்.
4 – சுதா மற்றும் சூர்யா, சொல்லி அடிக்கும் கூட்டணி – சுதாவின் நுட்பமும், சூர்யாவின் திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யா, முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார். இந்த இயக்குநர் – நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெய்மெண்ட் தயாரித்திருக்கும் சூரரைப் போற்று, நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.