தீபாவளி ரேஸில் ‘களவாணி மாப்பிள்ளை’

Get real time updates directly on you device, subscribe now.

தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ படம் ரிலீசாவதால் அதற்குப் போட்டியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீரென்று அந்தப்படமும் தீபாவளி ரேஸிலிருந்து விலகி நவம்பர் 16-ம் தேதி தள்ளிப்போய் விட்டது.

இதற்கிடையே தினேஷ் நாயகனாக நடித்துள்ள ‘களவாணி மாப்பிள்ளை’ படம் தீபாவளிக்கு வெளியாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 138

‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை காந்தி மணிவாசகம் இயக்கியிருக்கிறார்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி படமாக தயாராகி உள்ளதால் இப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வருவது பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்து தீபாவளியையொட்டி நவம்பர் 6-ம் தேதி வெளியிடுகிறார்கள்.

தினேஷூக்கு ஜோடியாக அதிதி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.