பாலிவுட்டில் பாவனாவை அறிமுகப்படுத்தும் விஜய் பட வில்லன்!

Get real time updates directly on you device, subscribe now.

‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ்.

இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘பை பாஸ் ரோட்’ என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

இது குறித்து பாவனா ராவ் பேசுகையில், ‘கன்னட படங்களில் நடித்து வந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது இயக்குநர் நமன் நிதீஷ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.” என்றார்.

அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது இரண்டு முன்னணி நடிகர்களின் கன்னட படங்களில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் நீல் நிதீன் முகேஷ், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பதுடன், பாகுபலி படப்புகழ் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.