இதெல்லாம் ஒரு தகுதியாம்மா? : லட்சுமி ராமகிருஷ்ணனை மீண்டும் விளாசிய ஸ்ரீப்ரியா!

Get real time updates directly on you device, subscribe now.

sri-priya

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிப்படையாக அலசுவதும், கிட்டத்தட்ட சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு பஞ்சாயத்து போல நிகழ்ச்சிகள் வருவதும் சமீபகாலமாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் ஏழை மக்களின் வாழ்க்கை தான் பாழாகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்து கொண்டு பஞ்சாயத்து செய்வதெல்லாம் தவறு என்று நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணனையும், குஷ்புவையும் சில நாட்களுக்கு முன்பு கடுமையாக சாடியிருந்தார் நடிகை ஸ்ரீபிரியா.

இதுபற்றி கருத்து சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன் ‘எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது, அதனால் நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று பதில் சொன்னார்.

ஆனாலும் அவரின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாத நடிகை ஸ்ரீப்ரியா ‘ஏம்மா மூணு பெண் பிள்ளைகளை பெற்று வைத்திருப்பதெல்லாம் ஒரு தகுதியாம்மா?, எனக்கும் கூடத்தான் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கவுன்ஸிலிங் என்பது பல கட்டங்களில் நடப்பது, ஆனால் முக்கால் மணி நேரம் நடக்கிற ஷோவில் எப்படி முழுமையாக தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை’ என்று மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் – குஷ்புவை கடுமையாக சாடியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.

எப்படியோ ரெண்டு நிகழ்ச்சிகளுக்கும் பெரிய சைஸ் கேட்டு போட்டா சரிதான்!